பிரபல நடிகரின் தந்தையும் கொரோனாவுக்கு பலி….

328
Spread the love

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தமிழகத்தையே புரட்டிப் போட்டுவிட்டது. இதுவரை 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து இன்னும் தமிழகம் மீளவில்லை. இந்த இரண்டாம் அலையில் அடுத்தடுத்து நிகழ்ந்த சினிமா பிரபலங்களின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரபல நடிகரின் தந்தை கொரோனாவால் மரணம்!

நடிகர்கள் வெங்கட் சுபா, நிதிஷ் வீரா, மாறன், பவுன்ராஜ், குட்டி ரமேஷ், அருண்ராஜா காமராஜின் மனைவி என பலர் உயிரிழந்தனர். இந்த நிலையில், பிரபல நடிகர் பால சரவணனின் தந்தை ரெங்கநாதன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் பாலசரவணனின் தந்தை ரெங்கநாதன் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரபல நடிகரின் தந்தை கொரோனாவால் மரணம்!

கடந்த மாதம் பால சரவணனின் தங்கையின் கணவர் கொரோனாவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 32 தான் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY