Spread the love

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் பிற்பகல் 2 மணியளவில் இது புயலாக மாறி வலுப்பெற்றது. இது தற்போது சென்னைக்கு தென்கிழக்கில் 1250 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இது மணிக்கு 25 கிமீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது வடதமிழகம், ஆந்திராவை நோக்கி நகரும் என்று  வானிலை மையம் கணித்துள்ளது. இதனால் தமிழக கடற்கரையோர மாவட்டங்களில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY