பேங்க் கேஷியரின் வீட்டில் நகை, பணம் கொள்ளை….

48
Spread the love

விழுப்புரம் அருகே திருநாவலூர் போலீஸ் சரகம் கெடிலம் அருகே உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊழியராக உள்ளார். அவரது மனைவி இந்துமதி. இவர் பண்ருட்டி அருகே வீர பெருமாநல்லூரில் உள்ள தனியார் பேங்கில் கேஷியராக உள்ளார். நேற்று காலை கோவிந்தராஜ் தாயாருக்கு திடீரென உடல்நலகுறைவுவிழுப்புரம் அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை-பணம் கொள்ளை ஏற்பட்டது. உடனே கோவிந்தராஜ் தனது மனைவி இந்துமதியுடன், தாயாரை அழைத்துக்கொண்டு ஒரு காரில் புதுவையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்குள்ள பீரோவை உடைத்து அதில் உள்ள நகையை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளனர்.நேற்று மாலை கோவிந்தராஜ் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்துகிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 40 பவுன் நகை, ரூ. 1½ லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பதறிபோன கோவிந்தராஜ் இதுகுறித்த திருநாவலூர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார்  வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் பற்றி துப்புதுலக்க மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. என்றாலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சியை வைத்து கொள்ளையர்களை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY