பாஜவிடம் விலக நேரம் பாக்கிறோம்.. அமைச்சர் விரக்தி பேச்சு..

230

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் எம்ஜிஆரின் 103வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் வெற்றிவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது அமைச்சர் பாஸ்கரன் பேசுகையில் .. பாஜ.,விடம் இருந்து விலகி தனியாக செல்வதற்கான நேரத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். எங்களின் அமைச்சரவையிலே எல்லாரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். நீங்கள் எங்களை ஒதுக்கி விட்டீர்களே தவிர நாங்கள் உங்களை ஒதுக்க மாட்டோம். நீங்கள் எம்எல்ஏ தேர்தலில் எங்களுக்கு ஓட்டுபோடவில்லை.  பாஜ.,வை வேண்டாம் என ஒதுக்கினாலும் நீங்கள் திமுகவிற்கு தான் ஓட்டுபோடுவீர்கள். இவ்வாறு பாஸ்கரன் பேசினார்.

LEAVE A REPLY