பிசிசிஐ சம்பள பட்டியலில் பெயர் இல்லை.. ஒய்வு பெற்றாரா தோனி?

189
Spread the love

உலகக்கோப்பையில் நியூஸிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் தோனி ஆடியதோடு சரி. இந்திய கிரிக்கெட் அணியில் அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை. தோனியும் ஓய்வு அறிவிக்கவில்லை. இந்த நிலையில் இன்று பிசிசிஐ சம்பள பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் தோனியின் பெயர் இடம் இல்லை.  கடந்த ஆண்டு புஜாரா, ரஹானே, அஸ்வின், ஜடேஜா உள்ளிட்டோருடன் தோனியும்  ஏ-பிரிவு வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்தார். இந்நிலையில் தோனியின் பெயர் நீக்கம் செய்யப்பட்டு இருப்பது அவர் ஒய்வு பெற்று விட்டதாகவே கருதப்படுவதாக கிரிக்கெட் ரசிகர்கள் கூறுகின்றனர். இன்றைய பிசிசிஐ சம்பள பட்டியல் விபரம்..  ஏ பிளஸ்-பிரிவில் ரோஹித் சர்மா நீடிக்கிறார். இவருடன் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஏ பிளஸ் பிரிவில் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளனர். இது ரூ.7 கோடிக்கான ஒப்பந்தப்பிரிவு ஆகும். அதே போல் ஏ பிரிவில் கடந்த ஆண்டு போலவே 11 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். காயத்தினால் அதிக போட்டிகளை ஆட முடியாமல் போன விருத்திமான் சஹா சி பிரிவிலிருந்து பி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஒப்பந்தப் பட்டியலில் பிரித்திவ் ஷா, விஜய் சங்கர் ஆகியோரும் இடம்பெறவில்லை.

ஏ+ பிரிவு: கோலி, பும்ரா, ரோஹித் சர்மா (ரூ.7 கோடி)

ஏ-பிரிவு (ரூ.5 கோடி) : அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்வர், புஜாரா, ரஹானே, தவண், ஷமி, இஷாந்த்சர்மா, குல்தீப், ரிஷப் பந்த், ராகுல்

பி-பிரிவு: (ரூ.3 கோடி): உமேஷ், சாஹல், பாண்டியா, சஹா, மயங்க் அகர்வால்

சி-பிரிவு (ரூ.1 கோடி): கேதார் ஜாதவ், பாண்டே, ஹனுமா விஹாரி, சைனி, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், அய்யர், வாசிங்டன் சுந்தர்.

LEAVE A REPLY