பியூட்டி பார்லரை திறக்க கோரிக்கை

333
Spread the love

திருச்சி பெண்கள் அழகு நிலையங்கள் நடத்துவோா் சாா்பில் திருச்சி மாவட்ட ஆட்சியாிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் அழகு நிலையம் உள்ளது. இந்த அழகு நிலையங்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் பணிபுாிந்து வருகின்றனா். ஊரடங்கு காரணமாக 40 நாட்களுக்‌கும் மேலாக அழகு நிலையங்கள் மூடப்பட்டு உள்ளது. இதனால் பெண்கள் அனைவரும் வறுமை பிடிக்கு தள்ளப்பட்டு உள்ளோம். மேலும் அழகு நிலையங்கள் அனைத்தும் வாடகை கட்டிடங்களில் இயங்குவதால் அதிகபடியான வருவாய் இழப்பு ஏற்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து உள்ளோம். அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, பாதுகாப்பான முறையில் குறைந்து ஊழியா்களை கொண்டு அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி அளித்திட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

LEAVE A REPLY