ஜோதிடர் அட்வைஸ் ..டிசம்பருக்குள் தேர்தலை விரும்பும் எடப்பாடி ?

3716
Spread the love

கொரோனா குறித்த திமுக தலைவர் ஸ்டாலினின் விமர்சனங்களை கடுமையான வார்த்தைகளால் எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. கட்சியிலும் ஆட்சியிலும் ஒன்மேன் ஷோவாக வலம் வர ஆரம்பித்திருக்கும்  எடப்பாடி பழனிச்சாமிக்கு நாம் ஏன் முன்கூட்டியே தேர்தலை ஏன் சந்திக்க கூடாது என யோசனை வந்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். இதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் இவைதான்..  கெ்ாரோனா பாதிப்பு எப்படியும் ஜூன் மாத இறுதி வரை ஏன் ஆகஸ்ட் வரை இருக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படிய தான் மத்திய அரசின் மருத்துவ வல்லுனர்கள் கணித்திருக்கின்றனர்.  அதுவரையில் சில கட்டுப்பாடுகள் தொடர  வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக உள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலை முடித்தால் தான் உள்ளாட்சிகளுக்கான மத்திய அரசின் நிதி கிடைக்கும். அதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. மேலும் கஜா புயல் ஆரம்பித்து தற்போதைய கொரோனா வரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. தரவும் போவதில்லை. கடந்த ஒரு மாத காலமாக டாஸ்மாக் வருமானம் இல்லாமல் போய்விட்டது. மேலும் வரி வருமானங்களை வசூல் செய்ய முடியாத நிலையில் பற்றாக்குறையில் தமிழக அரசு தடுமாறுகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு இறுதி வரை முக்கியமான பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை போன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்க முடியுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இவ்வளவு ஏன் பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை செய்து முடிக்க நிதி இருக்குமா? என்பது தெரியவில்லை. காரணம் கஜானாவில் இருக்கும் நிதி கொரோனாவிற்காக தொடரந்து செலவழிக்கப்பட்டு வருகிறது. மேலும் அடுத்த ஆண்டு முழுபட்ஜெட்டை போட முடியாது. இனியும் எந்த நிதியும் கிடைக்காத நிலையில் கொரோனா செயல்பாட்டையும், தப்லிக் ஜமாத் விவகாரம் போன்றவைகளை முன்நிறுத்தி ஏன் தேர்தலை சந்திக்க கூடாது என எடப்பாடி தரப்பு யோசிக்க துவங்கியிருப்பதாக தெரிகிறது. அதற்கு தகுந்தாற்போல் எடப்பாடிக்கு நெருக்கமான ஜோதிடர்கள் இந்த ஆண்டு இறுதி வரை திமுக தலைவர் ஸ்டாலினின் ஜாதகம் வீக் தான்.. அடுத்த ஆண்டு என்றால் சொல்ல முடியாது என கூறியிருக்கின்றனர். மேலும் கட்சி்யிலும் ஓபிஎஸ் கிட்டத்தட்ட ஒதுங்கி நிலையில் இருக்கிறார். எனவே கொரோனா பரபரப்பு முடிந்தவுடன் முன்கூட்டியே தேர்தல் என்கிற அஜெண்டாவை பாஜகவிடம் பேசி ஓகே வாங்கிடலாம் என்றும் எதிரிகளுக்கு யோசிக்க விடாமல் அடித்து விடலாம் என நினைக்கிறாராம்.. எடப்பாடியார். நடக்குமா? . 

LEAVE A REPLY