பின்னுக்கு தள்ளப்பட்ட பேஸ்புக், கூகுள், ஆப்பிள்

273
Spread the love

கிளாஸ்டோர்ஸ் என்ற அமைப்பு அமெரிக்காவில் செயல்படும் நிறுவனங்களில் எது சிறந்த நிறுவனம் என்ற பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. 2018ல் இந்த நிறுவனங்கள் எப்படி செயல்பட்டன, பணியாளர்களை எப்படி கவனித்துக் கொண்டது  உள்ளிட்ட விஷயங்கள் கணக்கில் கொள்ளப்பட்டது. 100 நிறுவனங்கள் இந்த பட்டியலில் உள்ளது. இதில் பேஸ்புக்  7வது இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு பேஸ்புக் முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. டேட்டா திருட்டு பிரச்னையால் தற்போது வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2015ல் முதல் இடத்தில் இருந்த கூகுள் தற்போது 8வது இடத்தில் உள்ளது.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் பெய்ன் அண்ட் கோ என்று நிறுவனம் உள்ளது. இது  பொருளாதார ஆலோசனை நிறுவனமாகும். இந்த பட்டியலில் பெரிய நிறுவனமான அமேசானுக்கு இடமே இல்லை. ஆப்பிள் நிறுவனம் 71வது இடம், மைக்ரோசாப்ட் 34 வது இடம் பிடித்துள்ளன. லின்க்டின் நிறுவனம் 6வது இடம் பெற்றது.

LEAVE A REPLY