BHEL-ல் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு

924
Spread the love

பிஎச்இஎல் இன்ஜினியர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்து அறிவித்த்துள்ளது. சிவில் திட்ட பொறியாளர்கள் (பி.இ / பி.டெக்) திட்ட மேற்பார்வையாளர்கள் (டிப்ளோமா வைத்திருப்பவர்கள்) இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மொத்தம் 23 பணியிடங்கள் உள்ளது.தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இரண்டு வருடத்திற்கு மட்டும் பணி அமர்த்த்ப்படுவார்கள். நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு நடக்கும். சிவில் இன்ஜினியர் 3. சிவில் மேற்பார்வையாளர்- 20. விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 21.
வயது வரம்பு: 33 வயது.எஸ்.சி/எஸ்.டி வயது தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: திட்ட பொறியாளர்களுக்கு, சிவில் துறையில் முழு நேர பி.இ / பி.டெக் (குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன், எஸ்.சி/எஸ்.டி – 50%) 2 ஆண்டு முன் அனுபவம் தேவை.திட்ட மேற்பார்வையாளருக்கு, சிவில் துறையில் முழுநேர டிப்ளோமோ.(குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன், எஸ்.சி/எஸ்.டி –50%) ஓராண்டு முன் அனுபவம். விண்ணப்ப கட்டணம் ரூ.200. ஊதியம்: திட்ட பொறியாளர்கள் பதவிக்கு மாத ஊதியம் ரூ.66,000. திட்ட மேற்பார்வையாளர்கள் ஊதியம் ரூ 36,850. //careers.bhel.in:8443/bhel/jsp/# என்ற இணைய தளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்ப நகலையும், ஆன்லைன் கட்டண ரசீதையும் “ஏஜிஎம் (எச்ஆர்), பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட், எலெக்ட்ரானிக்ஸ் பிரிவு, பிபி எண் 2606, மைசூர் சாலை, பெங்களூரு -560026 ” என்ற முகவரிக்கு டிசம்பர் 26ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY