கையை அறுத்துக்கொண்டேன்.. பிக்பாஸ் மதுமிதா பரபரப்பு தகவல்

241
Spread the love

தமிழ் மக்களுக்காக உயிரை கொடுக்க முடியா என்று கேட்டனர், அதனால் கையை அறுத்துக் கொண்டேன். அதனால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டேன் என பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர் மதுமிதா கூறியுள்ளார். கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டு தலைவராக தேர்வு செய்யப்பட்டார் மதுமிதா. அதை தொடர்ந்து பிரபல சமூகவலைதள செயலி விளம்பரதாரர் நிகழ்ச்சியொன்றை நடத்தியது.  இதில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய சொந்த கருத்தை தெரிவிக்க அழைக்கப்பட்டனர். அப்போது போட்டியாளர்கள் அனைவரும் பேசினர். ஆனால் மதுமிதா பேசியது மட்டும் இடம்பெறவில்லை. அதை தொடர்ந்து ஒளிப்பரப்பான அடுத்த எபிசோட்டில் மதுமிதா வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.  மதுமிதா எலிமினேட்டானதற்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், அவர் பிக்பாஸில் தனக்கு நடந்த பிரச்னை மற்றும் வெளியேற்றப்பட்டதற்கான காரணத்தை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். கடந்த வியாக்கிழமை ஒரு டாஸ்க் நடத்தப்பட்டது. அதில் என்னுடைய கருத்தை கூறும்படி கேட்டனர். அப்போது பேசிய நான், வருண பகவானும் கர்நாடகாக்காரர் தான் போல. அதனால் தான் தமிழ்நாட்டுக்கு மழையே தர மாட்டேன் என்கிறார். வருண பகவான் தயவுசெய்து தமிழகத்திற்கு கருணை காட்ட வேண்டும் என்று சொன்னேன். 

இதற்கு ஆட்சபேம் தெரிவித்த ஷெரீன், கர்நாடகாவை சேர்ந்த நான் இங்கு இருக்கையில் எப்படி இதுபோன்ற கருத்தை நீ கூறலாம் என கத்தினார். தனியார் சமூகவலைதள செயலியின் என்னுடைய கருத்தை கேட்டார்கள். அதனால் அப்படி நான் சொன்னேன். இதில் என்ன தவறு என்றேன். இதற்கு ஒட்டுமொத்த வீடே எதிர்ப்பு தெரிவித்தது. எப்போது பார்த்தாலும் தமிழ் பெண், தமிழ்-ன்னு கூறிக்கொண்டே இருக்கும் நீ, தமிழ் மக்களுக்காக உயிரை கொடுக்க முடியுமா எனக் கேட்டனர். அதனால் என் கையை அறுத்துக் கொண்டேன். அந்த சமயத்தில் எனக்கு ஆதரவாக இருந்தது சேரன் மற்றும் கஸ்தூரி தான் என்று தெரிவித்துள்ளார். 

LEAVE A REPLY