பெரியார் சிலை விவகாரம்… கனிமொழியை விசாரிக்க பாஜ கோரிக்கை..

155
Spread the love

திருச்சி இனாம் குளத்தூர் பகுதியிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு சிலர் காவிச் சாயம் ஊற்றப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த திமுக எம்பி கனிமொழி  பெரியார் பிறந்தநாளன்று தமிழக பாஜக தலைவர் முருகன், பெரியார் சமூகநீதிக்காக பாடுபட்டவர் எனத் தெரிவித்ததை சுட்டிக்காட்டி, இதுதான் பாஜ பெரியாருக்கு காட்டும் மரியாதையா? நீட் , புதிய கல்விக் கொள்கை, விவசாயிகள் போராட்டம் இவற்றுக்கான பாஜகவி பதில் பெரியார்தானா?” என்றும் கேள்வி எழுப்பினார்.. இந்த நிலையில் பாஜ மாநிலத் தலைவர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கையில், திருச்சியில்‌ ஈ.வெ.ரா அவர்களின்‌ சிலை அவமதித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அநாகரீக செயலை யார்‌ செய்திருந்தாலும்‌ அவர்களை காவல்‌ துறையினர்‌ விரைவில்‌ கைது செய்து சட்டப்படி தண்டிக்க வேண்டும்‌. காவி புனிதமானது. அனைவரையும்‌ அரவணைக்கும்‌ தியாகப்‌ பண்பின்‌ குணமே காவி. அதை தவறான சிந்தனையோடு பயன்படுத்துவது பண்பல்ல” என கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் கனிமொழி கூறியது தொடர்பாக குறிப்பிட்ட அவர்  காவல்துறை விசாரித்துக்‌ கொண்டிருக்கும்‌ நேரத்திலேயே, இதற்கு உள்நோக்கம்‌ கற்பித்து அரசியல்‌ ஆதாயம்‌ தேட முயற்சிக்கும்‌ தி.மு.கவின்‌ வன்மமான அரசியல்‌ உள்நோக்கம்‌ கண்டிக்கத்தக்கது. மேலும்‌, விசாரணை நிலுவையில்‌ இருக்கும்‌ போதே, இப்படி பேசியிருப்பது, இந்த செயல்‌ திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும்‌ எழுப்புகிறது. ஆகையால்‌, காவல்‌ துறையினர்‌ கனிமொழியை இதுகுறித்து விசாரித்து உண்மையை அறிய வேண்டும்‌. இந்த அநாகரீக செயலின்‌ பின்னால்‌ யார்‌ இருந்தாலும்‌ அவர்கள்‌ தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY