பாஜவுக்கு 35 தொகுதி… அமித்ஷாவுடனான பேச்சுவார்த்தையில் முடிவு..?.

964
Spread the love

சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜ-அதிமுக கூட்டணி உறுதி என இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அறிவித்தனர். இதன் தொடர்ச்சியாக லீலா பேலசில் தங்கியிருந்த அமித்ஷாவை இபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் சந்தித்து பேசினர். அப்போது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. அப்போது கூட்டணி கட்சிகள் யார் யார்? என்பது குறித்தும் பாஜவிற்கு சீட்டு எத்தனை என்பது குறித்தும் பேசப்பட்டுள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 5 சீட்டுகள் வழங்கப்பட்டன. அதன் அடிப்படையில் இந்த முறை தங்களுக்கு கூடுதலாக 50 சட்டமன்ற தொகுதிகளை வழங்க வேண்டும் என அமித்ஷா கூறியுள்ளார். இறுதியில் அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 35 சீட்டு வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

LEAVE A REPLY