தெரு விளக்கு எரியல… திருச்சியில் பாஜகவினர் சிமிலி விளக்கு போராட்டம்…

129
Spread the love

திருச்சி மாநகராட்சி 23 வார்டு செங்குளம் காலனியில் ஒரு மாதங்களுக்கு மேலாக தெரு விளக்குகள் இயங்கவில்லை ஒரு மாதமாக பல முறை  கூறியும் செயல்படாத குடிசைபகுதி மாற்று வாரியத்தை கண்டித்து இன்று நிர்வாக பொறியாளரிடம் சிமிலி விளக்கு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாஜக பாலக்கரை மண்டல் தலைவர் ராஜசேகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் நிர்வாக பொறியாளரிடம் சிமிலி விளக்கு கொடுக்கும் நூதன போரட்டத்தில்  ஈடுபட்டனர். அப்போது நிர்வாகம் பொறியாளர் அழகு மெய்யப்பன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்த அதிகாரிகள் கூறியதின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

LEAVE A REPLY