பாஜக _ சிவசேனா கூட்டணி முறிந்தது

208
Spread the love
  • மகாராஷ்டிராவில் பாஜக சிவசேனா கூட்டணி நடந்த தேர்தலில் வெற்றிபெற்றது முதல்வர் பதவி மற்றும் அமைச்சர் பதவி  சர்ச்சையில்  ஆட்சி அமைக்க முடியவில்லை .இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் தனிப்பெரும் கட்சி என்ற முறையில் பாஜகவுக்கு கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதால் அந்த அழைப்பை நிராகரித்தது பாஜக.
  • இதையடுத்து அடுத்த பெரிய கட்சி என்ற முறையில் சிவசேனாவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார் .இந்நிலையில்  தேசிய வாதகாங்கிரசிடம் சிவசேனா ஆதரவு கேட்டது. பாஜகவுடன் கூட்டணி முறித்தால்தான் ஆதரவு அளிக்க முடியும் என்று சரத்பவார் அறிவித்தார்.
  • இதையடுத்து மத்திய அமைச்சரவையில் சிவசேனா சார்பில் கனரக தொழில்துறை அமைச்சராக இருந்த அரவிந்த் சாவந்த் தனது அமைச்சர் பதவியை இன்று காலை ராஜினாமா செய்தார் .இதையடுத்து பாஜக சிவசேனா கூட்டணி முடிவுக்கு வந்தது .தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் சிவசேனா மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கிறது.

 

LEAVE A REPLY