கைது ஆகப்போகும் அடுத்த தலைவர் யார்?.. பாஜ கிளப்பும் பீதி

418
தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒரு அரசியல்வாதி விரைவில் கைது செய்யப்படுவார் என பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வின்குமார் உபாத்யாயா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில வாரங்களாக சிதம்பரம் போல் தமிழகத்தை சேர்ந்த எதிர்கட்சி தலைவர் ஒருவர் விவைரில் கைது செய்யப்படுவார் என எச் ராஜா கூறி வருகிறார். யார் எந்த தலைவர் என நிருபர்கள் கேட்டால் ‘வெயிட் அண் சி’ என பதில் அளித்துவருகிறார். இந்த நிலையில் ராமேஸ்வரம் கோவிலுக்கு  வந்த பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வின்குமார் உபாத்யாயா,  ப.சிதம்பரம் கைதாகி தற்போது சிறையில் இருப்பதுபோல, மற்றொரு தமிழக அரசியல்வாதியும்  விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் அவர் கூறினார். அடுத்தடுத்து பாஜ தலைவர்கள் தமிழகத்தில் அடுத்து ஒரு தலைவர் கைது செய்யப்படுவார் என கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

LEAVE A REPLY