Spread the love

ரபேல் விமான ஒப்பந்த்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறி வந்தார்.பாதுகாப்புத் துறையில் எந்தவொரு அனுபவமும் இல்லாத அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் டிபன்னெஸ்  நிறுவனத்திற்கு 30,000 கோடிக்கு இந்த ஒப்பந்த வழங்கப்பட்டது. அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் லிமிடெட்டிற்கு ஒப்பந்தம் வழங்காததை குற்றம் சாட்டி வருகின்றனர்.

பாராளுமன்றத்தில் ரபேல் ஜெட் ஒப்பந்தம் குறித்தான விவாதத்திலிருந்து காங்கிரஸ் ‘ஓடி’விடுவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருந்தார்.
இதற்கு எதிர்க் கட்சித் தலைவர் மல்லிஜார்ஜுன  கார்கே ‘காங்கிரஸ் இந்த சவாலை ஏற்கிறது’ என்று கூறியிருந்தார். இதன்படி ஜனவரி 2 நாளை  ரபேல் ஒப்பந்தம் குறித்தான ஒப்பந்தத்திற்கு சபாநாயகர் சுமித்ரா மாகஜனிடம்  நேரம் ஒதுக்குமாறு கார்கே கேட்டுக் கொண்டுள்ளார். “ஜெட்லி கொடுத்த சேலன்ஞ் ஏற்கிறோம்…. ஜனவரி 2 விவாதத்திற்கு தயாராக உள்ளோம்” என்று கார்கே தெரிவித்தார்.

 

LEAVE A REPLY