நித்திக்கு… புளு கார்னர் நோட்டீஸ்

226

நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என கண்டிறிந்து கைது செய்ய புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  வழக்கு தொடர்பாக நித்தியானந்தாவிடம் விசாரணை நடத்த குஜராத் போலீஸ் கடந்த சில மாதங்களாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. நித்தியானந்தாவின் இருப்பிடம் குறித்த தகவல் கிடைக்காததால் இன்டர்போல் அதிகாரிகளின் உதவியை நாடியிருந்தது குஜராத் போலீஸ். இந்த நிலையில் இன்டர்போல் தலைமறைவாக உள்ள நித்தியானந்தாவிற்கு புளு கார்னர் நோட்டீசை வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத் போலீசாரின் கோரிக்கையை ஏற்று இன்டர்போல் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. 

புளு கார்னர் நோட்டீஸ் என்றால் என்ன?.

ஒரு குற்றவியல் விசாரணையில் தேடப்படும் ஒரு நபரை கண்டுபிடிக்க, அடையாளம் காண அல்லது பெற கொடுக்கப்படும் அறிவிப்பு நோட்டீஸ்.

LEAVE A REPLY