திருச்சியில் கள்ள சரக்கு – 4 பேர் கைது – 121 பாட்டில் பறிமுதல்

134
Spread the love

திருச்சி மாவட்ட எஸ்பி  உத்தரவின் படி, திருவெறும்பூர் காவல் நிலைய எஸ்ஐ நாகராஜன் தலைமையிலான தனிப்படையினருக்கு லால்குடி பகுதியில்  மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து, இரவு நேரங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் மாறு வேடத்தில் தீவிர கண்காணிப்பில்  ஈடுபட்டு வந்தனர். லால்குடி பஸ் ஸ்டாப் அருகே நள்ளிரவில் மது விற்பனைக்காக கூடிய நான்கு பேர் கொண்ட கும்பலை தனிப்படையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் விற்பனை செய்வதற்காக

 

கள்ளத்தனமாக கொண்டு வந்த, 121 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து  2 ஆயிரத்து 240 ரூபாய்  பணமும், இரண்டு செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

LEAVE A REPLY