ஒரே நாளில் ரூ.426 கோடி மது பாட்டில்கள் விற்பனை…திருச்சி 3ம் இடம்

59
Spread the love

கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக நாளை முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த 15 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக நேற்றே டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் குவிந்தனர். 15 நாட்களுக்கு மது பாட்டில்களை அள்ளிச் சென்றுள்ளனர் இதன் காரணமாக நேற்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 426.24 கோடி ரூபாய்க்கு மது பாட்டில்கள் விற்றுத் தீர்ந்தன. இதில் சென்னை மண்டலத்தில் அதிகபட்சமாக 100.43 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 87.20 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 82.59 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 79.82 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 76.12 கோடி ரூபாய்க்கும் மது பாட்டில்கள் விற்றுள்ளன. 

LEAVE A REPLY