பப்ஜி விளையாடி 16 லட்சம் செலவழித்த பஞ்சாப் சிறுவன்

157
Spread the love

பஞ்சாபைச் சேர்ந்த 17 வயது சிறுவன் பப்ஜி விளையாட்டில் அடிமையாக இருந்துள்ளார். அவர் இந்த விளையாட்டை விளையாடுவதற்கு அவனுடைய அப்பா, அம்மாவின் வங்கிக் கணக்கிலிருந்து 16 லட்ச ரூபாயை செலவிட்டுள்ளான். ஆப் வாங்குவதற்கு விளையாடும்போது ஆப்பை அப்கிரேட் செய்வதற்கு பணத்தை செலவழித்துள்ளான். அவனுடன் இணைந்து பப்ஜி விளையாடியவர்களுக்கும் ஆப்பை அப்கிரேட் செய்ய பணத்தை செலவழித்துள்ளான். அவனுடைய அப்பா, அம்மா தெரிந்துவிடாமல் இருப்பதற்காக, வங்கியிலிருந்து மொபைல்போனுக்கு வந்த பணம் செலவானது தொடர்பான எஸ்எம்எஸ்களையும் அழித்துள்ளான். அவனுடைய அப்பா, ஒரு அரசு ஊழியர்.  இதுகுறித்து அவர் ஃபேஸ்புக்கில்  ‘என்னுடைய மகனின் படிப்பு செலவுக்கும் மருத்துவச் செலவுக்கும் வைத்திருந்த பணத்தை பப்ஜி விளையாடி தொலைத்துவிட்டான்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

LEAVE A REPLY