நாகை ‘சரக்குமாணவிகள்’ வீடியோ … மகளிர் ஆணையம் நோட்டீஸ்

2938

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான கலை கல்லூரி மாணவிகள் சக மாணவனுடன் இணைந்து மது அருந்துவது போன்ற வீடியோ காட்சி வெளியானது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மூன்று மாணவிகள் மற்றும் ஒரு மாணவன் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டனர். இதற்கு எதிராக தனியார் கல்லூரி ஊழியர்கள் சங்கம் சார்பில் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் தருமபுரம் ஆதினம் கல்லூரிக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கும்படியும், 30 நாட்களுக்குள் பதிலளிக்கும்படியும் கல்லூரி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY