திருச்சி, மதுரை, கோவை விமான சேவை திடீர் ரத்து

212

சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கு 2 ஆண்டுகளாக தினமும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் பயணிகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் இம்மாத தொடக்கம் முதலே இந்த விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.

இதையடுத்து, இந்நகரங்களுக்கு வரும் 30 ஆம் தேதிவரை விமான சேவையை ரத்து செய்வதாக இந்தியன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் 12 விமான சேவை ரத்தாகிறது. வெளியூர் மற்றும் வெளிநாடு செல்லும் விமானங்களுக்கு தட்டுப்பாடு இருக்கிறது. எனவே இங்கு நிறுத்தப்பட்ட விமானங்கள் வெளியூர் சேவைக்கு பயன்படுத்தப்படும். தற்போது சென்னையில் இருந்து வாரம் 3 நாட்கள் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் யாழ்ப்பாணம் செல்கிறது. இந்த சேவை தொடரும் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY