கார்-8000, பைக்-5000.. திருச்சியில் சிக்கிய “காதல் கொள்ளையன்” தாராளம்

506
Spread the love

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டார பகுதியில் கடந்த 3 மாதமாக கார்,பைக் திருட்டு அதிகரித்தது. இது குறித்து திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருவெறும்பூர் மலைக்கோயில் பகுதியில் போலீசார் வாகன சோதனை செய்தபோது சந்தேகத்திற்குரிய ஒருவரிடம் விசாரித்தனர். அவர் தஞ்சை மாவட்டம் நடுபடுகை வீரசிங்கம்பேட்டை சேர்ந்த அகஸ்டின் என்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதையடுத்து ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரித்தபோது அவர் பைக்குகளை திருடியது தெரிய வந்தது. அவர் மீது தஞ்சை, மயிலாடுதுறை, புதுகை, மன்னார்குடியில் பைக் திருட்டு வழக்குகள் இருப்பதும், ஒரு முறை குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்ததும் தெரிய வந்தது. சிறையிலிருந்த போது சக கைதியை பார்க்க வந்த அவரது மனைவியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு சிறையிலிருந்து வெளியே வந்து அந்த பெண்ணுடன் கரூரில் வசித்து வந்திருக்கிறார்.

 கடந்த 3 மாதமாக திருவெறும்பூர், துவாக்குடி, மணிகண்டம், லால்குடி, கரூர், காங்கேயம், கும்பகோணம், செங்கிப்பட்டி,  திருச்சி ஜங்சன் உள்ளிட்ட பகுதிகளில் 30 பைக்குகள், 2 கார்களை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கார்களை 8 ஆயிரத்துக்கும், பைக்குகளை 5 ஆயிரத்துக்கும் விற்றிருக்கிறான். இதையடுத்து அவன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.

LEAVE A REPLY