சமயபுரம், உறையூர், நாத்தாமலை தேரோட்டங்கள் ரத்து……

995
Spread the love

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா கடந்த மார்ச் 28ம்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. ஏப்ரல் 4-ம் தேதி காப்புக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.  அதைத் தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் தினந்தோறும் அம்மன் வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 12-ம் தேதி பகல் 2 மணிக்கு நடைபெற இருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள கோயில் திருவிழாக்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதை தொடர்ந்து நார்த்தாமலை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. நார்த்தாமலை தேரோட்டத்தை  முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை விடப்படுவது வழக்கம் தற்போது தேரோட்டம் ரத்து என்பதால் உள்ளுர் விடுமுறையும் கிடையாது என புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. 

இதே போல மிகவும் பிரசித்திப்பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் 20ம் தேதி நடைபெற உள்ளது. உறையூர் வெக்காளியம்மன் கோயில் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் வருடப்பிறப்பு அன்று நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு

தேரோட்டங்களும் நடைபெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. புதுக்கோட்டை நார்த்தாமலை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்துஇந்த இரண்டு கோயில் தேரோட்டங்களும் ரத்து செய்யப்படும் என்றே தொிகிறது. 

LEAVE A REPLY