சிதம்பரம் வீட்டு கதவு திறக்கல… ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்

309
Spread the love
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க நேற்று மறுத்துவிட்டது.
அவரது தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.  அதில் தொடர் இழுபறி ஏற்பட்டது. இந்த நிலையில் சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தொடர்பாக வெள்ளிக்கிழமையே விசாரணை மேற்கொள்ளப்படும் அறிவிக்கப்பட்டது. 
இந்நிலையில் இன்று இரவு 8 மணியளவில் டெல்லியில் காங்கிரஸ் அலுவலகம் வந்த ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசினார். பின்னர் டெல்லியில் உள்ள அவருடைய வீட்டிற்கு திரும்பினார். அவருடன் காங்கிரஸ் தலைவர்களான பிரபல வக்கீல்களான கபில்சிபில், அசோக் சிங்வி உள்ளிட்டோரும் சிதம்பரத்துடன்  வீட்டிற்குள் உள்ளே சென்றனர். இந்த தகவல் வெளியான சில நிமிடங்களில் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் சிதம்பரத்தின் வீட்டிற்கு வந்தனர். ஆனால் அவர்கள் வீட்டிற்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் சிபிஐ அதிகாரிகள் உள்ளிட்ட  அனைவரும் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். இதனையடுத்து எந்த நேரமும் சிதம்பரம் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

LEAVE A REPLY