ஆன்லைன் கேம்… கண்டித்ததால் திருச்சியில் பள்ளி மாணவன் தற்கொலை….

129
Spread the love

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் வரகுப்பை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாயி. இவரது மூத்த மகன் மணிகண்டன், திருச்சி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 2-வது மகன் தயாநிதி மாறன், அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், விடுமுறை காரணமாக வீட்டில் இருந்து வந்த தயாநிதிமாறன், தனது அண்ணன் மணிகண்டனின் செல்போனில் அடிக்கடி வீடியோ கேம் விளையாடி வந்துள்ளார். இதனால் மணிகண்டன், தயாநிதிமாறனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தயாநிதி மாறன், நேற்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

பின்னர் தான் விஷம் குடித்ததை பெற்றோரிடம் கூறிவிட்டு கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சந்திரசேகர், தயாநிதி மாறனை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்ற நிலையில், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY