ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 ……

54
Spread the love

நடிகர் ராகவா லாரன்ஸ்  சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிவிப்பில் சந்திரமுகி 2  படத்தில் தான் அடுத்து நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்க பி.வாசு  இயக்குகிறார். சந்திரமுகி முதல் பாகத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா என பலர் நடித்திருந்தனர். தற்போது லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் சந்திரமுகி 2ம் பாகத்தின் கதை  எப்படி இருக்கும் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.  அந்த அரண்மனையில் இருந்த வேட்டையன் மற்றும் சந்திரமுகி அகியோரின் பின்னணியை முழுமையாக விவரிப்பது போல முழு கதையும் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கான கதையை கடந்த சில வருடங்களாக தயார் செய்து வந்திருக்கிறார் பி.வாசு. ரஜினி அதில் நடிக்கமுடியாத சூழ்நிலையில் அதில் லாரன்ஸை நடிக்க வைத்து புது கதாபாத்திரங்களுடன் சந்திரமுகி 2வை அவர் எடுக்கிறார்.  லாரன்ஸ் ஏற்கனவே முனி- காஞ்சனா என தொடர்ந்து பேய் படங்களில் நடித்து வெற்றியும் கண்டிருக்கிறார். அவரது ரசிகர்களுக்கு சந்திரமுகி 2 அடுத்த ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

தற்போது கொரோனா முழு அடைப்பு காரணமாக அனைத்து படங்களும் ஷூட்டிங் நடந்தமுடியாமல் உள்ளது. நிலைமை சீராகி அரசு அனுமதி அளித்த பிறகு சந்திரமுகி 2 படத்தின் ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY