ரஜினி பட தலைப்பை மாற்ற சொன்னேன்…கமல் தகவல்

153
Spread the love

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் அலுவலகத்தில் இயக்குனர் பாலச்சந்தரின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பாலச்சந்தரின் மார்பளவு சிலையை திறந்து வைத்தனர்.இவ்விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது; எங்கள் ரசிகர்கள் வெளியே மோதிக் கொள்வார்கள். ஆனால் நாங்கள் தனியாக பேசிக்கொள்வதை பார்த்தால் வியப்பாக இருக்கும். ஒரு கட்டத்தில் ரஜினி போதும் நான் சினிமாவிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்றார்.

அதற்கு நான் எனது பிழைப்பும் போய்விடும். அவர் மட்டும் அவ்வளவு எளிதில் விலகி போக முடியாது. நம்மை வைத்து ரசிகர்கள் விளையாடுகின்றனர். அப்படியே இருக்கட்டும் என்றேன். அவரது தளபதி பட தலைப்பு பற்றி என்னிடம் தொலைபேசியில் சொன்னபோது அது எனக்கு கணபதி என காதில் விழுந்தது. இந்த தலைப்பு வேண்டாம் மாற்றுங்கள்  என்றேன். அதன்பின்தான் அது தளபதி என்று விளக்கினார்கள். அதன்பின் அருமையான தலைப்பு என பாராட்டினேன். தாமதமானாலும் தக்க மனிதருக்குதான் மத்திய அரசு விருது கொடுத்திருக்கிறது. இவ்வாறு கமல் பேசினார்.

LEAVE A REPLY