குத்தகை இடத்தை ஏமாற்றி விற்று விட்டதாக சிஎஸ்ஐ மீது பரபரப்பு புகார்

226
Spread the love

பெங்களூருவில் நாகாவரா வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வெல்லாரா ரயில் நிலையம் அமைக்க பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிலம் தேடி வந்தது. அப்போது ஒரு இடத்தை வாங்க முடிவு செய்த மெட்ரோ அது குறித்து கேட்ட போது அருகி்ல் இருந்த சிஎஸ்ஐ சர்ச் நிர்வாகம் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என கூறியது. இதனையடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தங்களது கட்டுப்பாட்டில் இருந்த 3618 சதுர மீட்டர் நிலத்தை மெட்ரோ பணிகளுக்காக சிஎஸ்ஐ சர்ச் நிர்வாகம் ரூ.60 கோடிக்கு விற்றது.  ஆனால் சிஎஸ்ஐ நிர்வாகம் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறும் நிலம், உண்மையில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமானது. இது தொடர்பாக நிலஅளவை ஆவணங்களும் பாதுகாப்பு அமைச்சகம் சமர்பித்துள்ளது. ஜூலை முதல் வாரத்தில் கர்நாடக மண்டல பாதுகாப்புத்துறை அலுவலகம் சார்பில் சிஎஸ்ஐ மற்றும் பெங்களூரு மெட்ரோ ரியல் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், சர்ச்சுக்கு உரிமையானது என கூறப்படும் நிலம் பாதுகாப்பு துறைக்கு உட்பட்டது. மேலும் அந்த இடம் 1865, 1884, 1898 ஆகிய ஆண்டுகளில் சர்ச் நிர்வாகிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது எனவும் பாதுகாப்பு அமைச்சகம்  குறிப்பிட்டுள்ளது. 

LEAVE A REPLY