கொரோனாவுக்கு “சித்த மருந்து சூப்பர்”.. மாநகராட்சி கமிஷனர்..

237
Spread the love

சென்னையில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் சென்னையில் குறிப்பிட்ட மையத்தில் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை பெற்று வந்த 30 பேர் கொரோனாவை வென்று வெள்ளிக்கிழமை தங்கள் வீடுகளுக்குப் புறப்பட்டனர். வீட்டிற்குப் புறப்பட்டவர்களுக்கு வழியனுப்பும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் சென்னை மாநகராட்சி கமிஷ்னர் பிரகாஷ் கலந்து கொண்டு குணமடைந்தவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். அதன் பிறகு நிரூபர்களிடம் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் 12 ஆயிரம் களப் பணியாளர் 15 மண்டலங்களிலும் வீடு வீடாக ஆய்வு மேற்கொள்கின்றனர்.

நடத்தப்படும் ஆய்வுகளின்போது அறிகுறி இருப்பவர்கள் கண்டறியப்பட்டுச் சம்பந்தப்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாம்களுக்கு அழைத்துச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்த படுகின்றனர். இந்த பணியை மேற்கொள்ளும் களப் பணியாளர்களுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சென்னையில் உள்ள கொரோனா மையங்களில், சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையினருடன் இணைந்து கூடுதலான படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளது. 

அதேபோல் சிகிச்சை வழங்கப்பட்டு வரும் மையங்களில் அலோபதி மருத்துவத்துடன் சேர்த்து சித்த மருத்துவ முறையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சித்த மருத்துவ முறையில் சிகிச்சை வழங்குவது நல்ல பலன்களைக் கொடுப்பதால், பல்வேறு மையங்களுக்குச் சித்த மருத்துவ முறையை விரிவுபடுத்தப் பணிகளைச் செய்து வருகிறோம்.  ஜவஹா் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மையத்தில் இதுவரை 744 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்போது வரை 569 போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 

LEAVE A REPLY