சென்னை ஐஐடி மாணவர்கள் 66 பேர் உள்பட 71 பேருக்கு கொரோனா…

103
Spread the love

சென்னை ஐஐடியில் 9 மாணவர் விடுதிகள் மற்றும் ஒரு விருந்தினர் மாளிகை உள்ளது. இந்த வளாகத்தில் உள்ளவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில்  71 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விடுதி மெஸ் மூலமாக பரவியுள்ளதாக சந்தேகிக்கப்ப்டுகிறது. இதுவரை 66 மாணவர்கள், நான்கு பணியாளர்கள் உட்பட 71 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் தேதி வளாகத்தில் 4 மாணவர்களுக்கு ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே அவர்களுடன் தொடர்பில் இருந்த 20 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதில் மெஸ் பணியாளர்கள் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து பாதிப்பு அதிகரிக்கவே மெஸ் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து காண்டேக்ட் ட்ரேசிங் செய்ததில் 11ஆம் தேதி 11 பேருக்கும், 12அ ம் தேதி 12 பேருக்கும், 13ஆம் தேதி 32 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஐஐடி வளாகத்தில் ஆய்வகங்களும் மூடப்பட்டுள்ளன. மாணவர்களும் ஆசிரியர்களும் தனிமைப்படுத்திக் கொண்டு விடுதி அறைகளில் இருந்தோ அல்லது வீடுகளில் இருந்தோ பணி செய்ய உத்தரவிடப்பட்டது.  மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 71 பேரும் கிங் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர். அவர்கள் உடல்நிலை சீராக உள்ளது. மொத்தம் 774 மாணவர்களில் 408 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா டெஸ்ட் செய்ய சென்னை ஐஐடி முடிவு செய்துள்ளது.

LEAVE A REPLY