குழந்தைக்கு காங்கிரஸ் என பெயர்.. ராஜஸ்தான் கட்சிக்காரர் முடிவு

76

ராஜஸ்தான் முதல்வர் அலுவலகத்தில் மீடியா அதிகாரியாக பணியாற்றி வருபவர் உதய்பூரைச் சேர்ந்த வினோத் ஜெயின். இவருக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் 2வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு காங்., என பெயரிட்ட வினோத் ஜெயின், அதற்கான பிறப்பு சான்றிதழை நேற்று பெற்றுள்ளார்.

இது பற்றி வினோத் ஜெயின் கூறுகையில், எனது ஒட்டுமொத்த குடும்பமும் காங்., கட்சியை சேர்ந்தவர்கள். எனது வருங்கால சந்ததிகளும் எங்களின் பாதையை பின்பற்ற வேண்டும் என்பதற்காக கட்சியின் பெயரையே என் குழந்தைக்கு வைத்துள்ளேன். எங்கள் குடும்பத்தில் உள்ள சிலர் இந்த பெயரை குழந்தைக்கு வைத்து அழைப்பதில் தயக்கம் காட்டினர். ஆனால் நான் இந்த பெயரை வைப்பதில் தீவிரமாக இருந்தேன்.

என் மகன் ஜூலை மாதம் பிறந்தான். நீங்கள் போராட்டத்திற்கு பிறகு இப்போது தான் அவரது பிறப்பு சான்றிதழில் காங்., ஜெயின் என பதிவு செய்து பெற்றுள்ளேன். அசோக் கெலட்டால் ஈர்க்கப்பட்ட நான், அவருடனேயே இருந்து வருகிறேன். என் மகனும் 18 வயது ஆனதும் அரசியலுக்கு வருவான் என நினைக்கிறேன். இந்த பெயராலேயே கட்சியில் முக்கிய பங்கு என் மகனுக்கு கிடைக்க உள்ளது என்றார்.

LEAVE A REPLY