Spread the love

கடந்த ஆண்டு பரபரப்பாக பேசப்பட்ட மீ டூ இயக்கத்தைத் தொடங்கி வைத்தவர் பாடகி சின்மயி.  இவர் கவிஞர் வைரமுத்து மீது புகார் அளித்தார். இதையடுத்து மேலும் பலர் தங்கள் புகார்களை வெளிப்படுத்தவும் சின்மயி உதவினார். ஆனால் வைரமுத்து மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் அவர் மேற்கொள்ளவில்லை. இதற்கு உரிய ஆதாரங்களை அவர் சமர்ப்பிக்காததால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில் சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய ஒரு பெண் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்தார். இது  நாட்டையே உலுக்கியது. ஆனால் இதை கோகய் மறுத்தார். இந்நிலையில் உச்சநீதிமன்ற  நீதிபதி கோகய்க்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறார் சின்மயி. இதற்காக போலீசாரிடம் அவர் அனுமதி கேட்டுள்ளார்.

LEAVE A REPLY