டிரைவரிடம் விசாரணை.. கைதாகிறார் சிதம்பரம்

327
Spread the love

சிதம்பரம் மேல்முறையீடு வழக்கை உடனடியாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மதிய இடைவேளைக்கு பிறகு இரண்டாவது முறையாக சிதம்பரம் தரப்பு அளித்த மனுவை ஏற்க மறுத்து விட்ட நீதிபதி ரமணா இது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனு செய்யுமாறு கூறியதோடு ஏற்கனவே கூறிய நிலையில் தான் தான் இருப்பதாக கூறி விட்டார்.  ஏற்கனவே அயோத்தி வழக்கு விசாரணையில் தலைமை நீதிபதி உள்ளதால் சிதம்பரம் முன் ஜாமின் மீதான விசாரணை நடைபெறுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் சிதம்பரம் தரப்பில் 4 மணிக்கு தலைமை நீதிபதியிடம் மனு செய்யவுள்ளதாக கூறப்படும் நிலையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்வதில் அடுத்தடுத்து பின்னடைவு மற்றும் நெருக்கடியால் சிதம்பரம் விரைவில் கைது செய்யப்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிதம்பரம் எங்கிருக்கிறார் என அவரின் டிரைவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பதிலளித்த சிதம்பரத்தின் டிரைவர், ” நேற்று மாலை காரில் வந்த சிதம்பரம் பாதி வழியில் இறங்கிக் கொண்டார். அதன் பிறகு அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை” என கூறி உள்ளார். சிதம்பரம் எங்கு இருக்கிறார் என இன்னும் தெரியவில்லை என சிபிஐ அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY