திருச்சி விமான நிலையத்தில் வௌிநாட்டு சிகரெட், கரன்சி பறிமுதல்

208
Spread the love

 திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய் நாடுகளுக்கும், சென்னைக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வாரத்தில் பெரும்பாலான நாட்கள் விமான நிலையம் பரபரப்பாக இருக்கும். அந்நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்வர். இந்நிலையில் இன்று மலேசியாவிலிருந்து வந்த விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது திருச்சியை சேர்ந்த 2 பயணிகள் வெளிநாடு சிகரெட்டுகளையும், பணத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மதிப்பு  10 . 24 லட்ச ரூபாய். வெளிநாட்டு கரன்சிகளின் மதிப்பு ரூ. 3 லட்சம் ஆகும்.

LEAVE A REPLY