காதலனுடன் கல்லூரி மாணவி எஸ்கேப்….. – சிட்டி நியூஸ்கள்

204
Spread the love

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் புது தெருவை சேர்ந்த ஆரோக்கியசாமி- விக்டோரியா ஆகியோரின் மகள் ஆக்னஸ் பிரிந்தா(19). நேஷனல் கல்லூரியில் பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் BHEL வளாகத்தில் ஒரு தேர்வு எழுதிவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அவர் தனது சகோதரர் அபின் பில்கேட்ஸ்க்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பி உள்ளார். அதில் தனது காதலரை திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசாரிடம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் ஆக்னஸ் பிரிந்தாவை தேடி வருகின்றனர்.

இளம்பெண் சந்தேக மரணம் – திண்டுக்கல் மாவட்டம் சிறுகுடி நத்தம் பகுதியை சேர்ந்தவர் ஐயனார். இவர் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த முனியாண்டி – ராஜம்மாள் ஆகியோரின் மகள் ரேவதி(25 )என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அய்யனார் திடீரென தனது மாமியார் ராஜம்மாளுக்கு போன் செய்து ரேவதி அம்மை நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் அளித்தார். இதனை தொடர்ந்து ராஜம்மாள் திண்டுக்கல் சென்று ரேவதியை அழைத்து வந்துள்ளார். திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் அழைக்கப்படும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சந்தேக மரணம் பிரிவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வயிற்று வலிக்கு ஆபரேஷன் செய்தவர் பலி – திருச்சி சுப்ரமணியபுரம் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர்(40). இவர் கடும் வயிற்று வலியினால் திடீரென பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு அப்பன்டீஸ் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு வந்த அவருக்கு திடீரென மீண்டும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY