திருச்சியில் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து..

124
Spread the love

ஆட்டோ டிரைவர்கள் தகராறு கத்திக்குத்து: திருச்சி கிழக்கு ஆண்டாள் வீதியில் ஈபி ரோட்டை சேர்ந்த குணசேகரன், கீழ ஆண்டாள் தெருவை சேர்ந்த ஆகியோர் ஒரே ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வந்தனர். இந்நிலையில் சவாரி தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மணி கத்தியால் குணசேகரனை குத்தியுள்ளார். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடன் தவணை வசூலிக்க வந்தவர்களுக்கு அடி உதை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த மகாபாரதி(34) என்பவர் திருச்சி தில்லைநகரில் உள்ள டிவிஎஸ் பைனான்ஸ் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரும் இவருடைய சக ஊழியர் விஜய் லியோதாமஸ் ஆகியோர் சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த இளையராஜாவிடம் தவணை வசூலிக்க சென்றுள்ளனர். 8 மாதமாக இருசக்கர வாகன கடனை செலுத்தாததால், அவரது வீட்டில் இருந்து ஒரு மாத தவணையை பெற்றுச் சென்றுள்ளனர். இதனை கேள்விப்பட்டு அங்கு வந்த இளையராஜா மற்றும் சிவலிங்கம் ஆகியோர் தவணை வசூல் செய்தவர்களை தாக்கியுள்ளனர். இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பாலக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

புனேவில் இருந்து வந்து அடி வாங்கிய பெண்: திருச்சி புதுக்கோட்டை சாலை ஜெயலலிதா நகரை சேர்ந்த லட்சுமி பஞ்சநாதன்(48) என்பவர் தற்போது புனேயில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு ஜெயலிதா நகரில் இருந்துள்ளது. மாநகராட்சியின் ஆக்கிரமிப்பில் இந்த வீடு இருந்துள்ளதால் மாநகராட்சியினர் அந்த வீட்டை இடித்துள்ளனர். வீட்டை கவனித்து வந்த லட்சுமி பஞ்சநாதனின் உறவினர் டேவிட்(42) என்பவர் இது குறித்து எந்த தகவலும் கொடுக்கவில்லை. இதனை தாமதமாக கேள்விப்பட்டு அங்கு வந்த லட்சுமி பஞ்சநாதன் இதுகுறித்து டேவிட்டிடம் கேட்டுள்ளார். அப்போது கோபம் அடைந்த டேவிட் அப்பெண்ணை தாக்கியுள்ளார். இது குறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் டேவிட் கைது செய்யப்பட்டார்.

மனைவியை காணல... திருச்சி மதுரை ரோடு பகுதியை சேர்ந்தவர் சலீம்(52). இவரின் மனைவி சகாரா பானு(44). இவருக்கு மனநலம் பாதித்து உள்ளதாகவும் அதற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சகாரா பானுவை காணவில்லை. அவர் எங்கு தேடியும் கிடைக்காததால் இது குறித்து கோட்டை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

அப்பாவை காணல… திருச்சி தென்னூர் இனாம்தார் தோப்பு பகுதியை சேர்ந்த சபீர் அகமது(45). இவரின் தந்தை முகமது மஸ்தான்(75) என்பவர் வீட்டை விட்டு வெளியே சென்று திரும்பி வரவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் இது குறித்துத் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கஞ்சா வைத்திருந்தவர் கைது: திருச்சி ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர் பகுதியில் ஸ்ரீரங்கம் போலீசார் நடத்திய சோதனையில் அங்கு கஞ்சா வைத்திருந்த மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY