ஃப்ளாஸ்க்கை சுத்தம் செய்வது மிகவும் எளிது….. இப்படி செய்து பாருங்க

335
Spread the love

மிக்ஸியின் ஜாடியில் உள்ள பிளேடைக் கழற்ற முடியாதபோது, அது மூழ்கும் அளவுக்கு வெந்நீர் ஊற்றி சிறிதுநேரம் கழித்து வெந்நீரை ஊற்றிவிட்டுக் கழற்றினால் எளிதில் கழற்றிவிடலாம்.

தினமும் ஃப்ளாஸ்க்கைப் பயன்படுத்துகிறவர்கள் அதில் சிறிதளவு வெந்நீரும் ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் கலந்து 15 நிமிடங்கள் வைத்திருந்து குலுக்கிக் கழுவினால், சுத்தமாக இருப்பதுடன், எந்த வாடையும் வீசாது.

சைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் நெடியை அகற்ற, பாத்திரங்களில் சிறிதளவு புளி அல்லது பயன்படுத்திய எலுமிச்சைப் பழத்தை தடவி, பிறகு வழக்கம்போல் கிளீனிங் பவுடர் போட்டுத் தேய்க்க… வாடை போய்விடும்.

சப்பான மருந்து உட்கொண்டவுடன் வெற்றிலைக் காம்பை வாயிலிட்டுச் சுவைத்தால் குமட்டல் இருக்காது.

LEAVE A REPLY