திருச்சி வந்தார் முதல்வர் ஸ்டாலின்…..ஏர்போர்ட்டில் வரவேற்பு….

741
Spread the love

மேட்டூர் அணை திறக்கப்படுவதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி டெல்டா பகுதிகளில் நடைபெற்ற துார் வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். விமானத்தில் இருந்து அமைச்சர் துரைமுருகனுடன் இறங்கிய அவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், ரகுபதி, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், மாநகர போலீஸ் கமிஷனர் அருண், டிஐஜி ராதிகா, மாவட்ட போலீஸ் எஸ்பி மூர்த்தி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். விமான  நிலையத்தில்  எம்பிக்கள் திருநாவுக்கரசர், சிவா, எம்எல்ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், சௌந்திரபாண்டியன், ஸ்டாலின், பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், கதிரவன் அப்துல் சமது மற்றும் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் வரவேற்றனர். அதன் பின்னர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர்  கல்லணை புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய காரில் சென்றார். முதல்வர் வருகையையொட்டி திருச்சி விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

LEAVE A REPLY