மூலிகை சிகிச்சை எடப்பாடி கேரளா பயணம்?

195

14 நாள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் உடல் புத்துணர்ச்சிக்காக கோவையில் உள்ள ஆயுர்வேத மையம் ஒன்றில் சிகிச்சை எடுத்துக் கொள்ள எடப்பாடி தரப்புக்கு சிலர் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் கோவையை விட கேரளா ஆயுர்வேத மைய சிகிச்சை நல்ல பலன் அளிக்கும் என கூறப்பட்டுள்ளதால் இம்மாத இறுதி அல்லது அடுத்த மாத துவக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி 3 நாட்கள் கேரளாவில் முகாம் என கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றன. அந்த சமயத்தில் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பினரயி விஜயனை நேரில் சந்தித்து பேச முடிவெடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY