திருச்சி கொடிங்கால் வாய்க்கால் துார் வாரும் பணி….முதல்வர் ஸ்டாலின் ஆய்வு..

264
Spread the love

மேட்டூர் அணை திறப்பதை முன்னிட்டு காவிரி டெல்டா பகுதிகளில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளார். விமானம் மூலம் திருச்சிக்கு வந்த அவர் தஞ்சை மாவட்டம் கல்லணை மராமத்து பணிகளை ஆய்வு செய்த பின்னர், வல்லம் பள்ளிகரணை ஆகிய இடங்களில் அவர் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்தார். அதன் பின்னர் கார் மூலம் திருச்சி வந்தடைந்த முதல்வர் குழுமணி கொடியாலம் ஊராட்சி, கொடிங்கால் வாய்க்காலில் 1200 மீட்டர் நீளத்திற்கு

 

29.70 லட்சம் செலவீட்டில் நடைபெற்ற துார்வாரும் பணியினை அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் பொது அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு,  எம்பி திருநாவுக்கரசர், எம்எல்ஏக்கள் பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். அதன் பின்னர் அவர் மதிய உணவிற்காக டிவிஎஸ் டோல்கேட்டில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். 

LEAVE A REPLY