முதல்வர் ஸ்டாலினை நம்புகிறேன்… தீபா பரபரப்பு பேட்டி..

322
Spread the love
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்றும், அதனை மனுதாரர்களான தீபா, தீபக்கிடம் 3 வாரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு குறித்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நிருபர்களிடம் கூறியதாவது.. ”எனது அத்தை ஜெயலலிதாவின் ஆன்மா என்னை கைவிடவில்லை என நினைக்கிறேன். எங்கள் குடும்ப சொத்தை நான் அனுபவிக்க வேண்டும் என்பதே மறைந்த எனது பாட்டி, அப்பா, அத்தை உள்ளிட்டோரின் விருப்பமாக இருந்திருக்கும். அதனால் அவர்களது ஆன்மா தான் இன்று இப்படி ஒரு தீர்ப்பு வந்ததன் பின்னணியில் இருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை. அதிமுக ஆட்சியில் அத்தையோட வீட்டை கைப்பற்றியது முதல் நிம்மதி இல்லாமலே இருந்து வந்தேன். நிச்சயம் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த வழக்கில் மேல்முறையீட்டுக்கு செல்லமாட்டார் என நம்புகிறேன். அத்தையோட வீட்டுக்கு செல்வது குறித்து நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. சகோதரர் தீபக் உள்ளிட்ட அனைவருடனும் கலந்துபேசிய பிறகே அத்தையோட வீட்டுக்கு செல்வது பற்றி பேச முடியும்’.
 
கேள்வி:- வேதா இல்லம் அ.தி.மு.க.வின் கோவில் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளாரே?
 
பதில்:- இது சரியான கருத்து தான். அதில் எந்த மாற்று கருத்தும் எனக்கில்லை. நானே இதை பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனால் அதற்காக சட்டப்படியான வாரிசுதாரர்களிடம் அந்த பொறுப்பு செல்வதை தடுக்க கூடாது. வேதா இல்லத்தை கோவிலாக கருதுவது அவர்களது உரிமை, அதனை உடைமை என்று எடுத்துக்கொள்வது தவறு.
 
கேள்வி:– இந்த தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க. மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன?
 
பதில்:– அப்படி ஏதாவது நடந்தால், சட்டரீதியாக அதை எதிர்கொள்வோம்.
 
கேள்வி:– வேதா இல்லத்தை அருங்காட்சியகமாக மாற்றும் திட்டம் இருக்கிறதா?
 
பதில்:- அப்படி எந்த திட்டமும் எங்களுக்கு இல்லை. அப்படி ஒரு திட்டம் இருந்தால் நாங்கள் வழக்கு தொடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே…
 
 
 

LEAVE A REPLY