முதல்வர் திருச்சி வருகை தேதி உறுதியாகவில்லை..

286
Spread the love

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 26ம் தேதி சேலத்தில் இருந்து திருச்சி வந்து பின்னர் டெல்டா மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளை பார்வையிடப்போவதாக தகவல் வெளியானது. இது குறித்து etamilnews.comல் செய்தி வெளியானது. இந்த நிலையில் முதல்வர் வருதை தேதி உறுதி செய்யப்படவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில் முதல்வரின் டெல்டா விசிட் உறுதி தான். ஆனால் 26ம் தேதி என்பது உறுதியாகவில்லை. சேலத்தில் இருந்து கோவை செல்வதற்கான பயணத்திட்டம் இருக்கிறது. எனவே முதல்வர் டெல்டா விசிட் தேதி உறுதியானப்பிறகு முறைப்படி அறிவிக்கப்படும் என கூறிகின்றனர். 

LEAVE A REPLY