சேலத்தில் நலதிட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்…..

133
Spread the love

மேட்டூர் அணை திறப்பு மற்றும் ஆய்வு, நலத்திட்ட உதவிகள் வழங்கிடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சியில் இருந்து விமானம் மூலம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் சென்றடைந்தார். விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்றார். பின்னர் உங்கள் தொகுதியில்

முதலமைச்சர் துறையின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் நிகழ்ச்சி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்த

நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மனுதாரர்களுக்கு பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணை, மாற்று திறனாளிகளுக்கு, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் உள்ளிட்ட பல்வேறு நலதிட்ட உதவிகளை வழங்கினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, செந்தில்பாலாஜி, மதிவேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

LEAVE A REPLY