Spread the love
ஒரு கப் தேங்காய் பாலில் 89 மில்லி கிராம் மெக்னீசியம் இருக்கிறது. மெக்னீசியத்தால் நரம்புகள் அமைதியாகும். இரத்தக் கொழுப்பு கட்டுப்பாட்டில் இருக்கும்.
 
தேங்காய் பாலில் வைட்டமின் சி, இ, பி1, பி3, பி5, பி6, இரும்புச்சத்து, செலீனியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துகள்  உள்ளன. பசுவின் பால் ஒத்துக்கொள்ளாதவர்கள் தேங்காய் பாலை சாப்பிடலாம்.
 
பாஸ்பரஸ் சத்துகள் அதிகம் உள்ளதால் எலும்புகள் பலமாக்கும். தேங்காய் பாலில் இருக்கும் செலீனியம் எனும் வேதிப்பொருள் ஆர்த்தரைடீஸ் நோயைக் குணப்படுத்துகிறது.
 
 தேங்காய் பாலில் ஒமேகா3 என்ற முக்கிய வேதிப்பொருட்கள் இருப்பதால் உடலில் உள்ள நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது.
 
இதில் இருக்கும் நார்ச்சத்து அதை உட்கொண்ட பின் வெகுநேரம் பசி எடுப்பதைத் தடுக்கிறது. அதனால் உடல் எடை தானாகவே  குறைகிறது.
 
 
தேங்காய் பால் பருகினால், உடலில் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. தேங்காய் பால் பருக இயலாதவர்கள் தினம் ஒரு இளநீர் பருகலாம்.
 

LEAVE A REPLY