கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம்….

94
Spread the love

திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்காக அப்பகுதியில் ஆக்கிரமித்து குடியிருந்து வரும் 63 குடும்பங்களை 15 நாட்களுக்குள் காலி செய்யுமாறு விமான நிலைய ஆணைகுழுவின் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கொட்டப்பட்டு அம்பேத்கர் நகரில் குடிசை வீடு, ஓட்டு வீடு அமைத்து குடும்பத்துடன் வசித்து வருகிறோம். இந்நிலையில் உடனடியாக 63 குடும்பங்களை வருகிற 23ம் தேதிக்குள் அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவும் அப்படி அப்புறப்படுத்த தவறினால் விமான நிலையத்தின் ஆனைக்குழுவினரின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கையொப்பதுடன் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கூலித் தொழில் செய்து வரும் ஏழை எளிய மக்கள் எங்களுக்கு மாற்று இடம் கொடுத்த பிறகு அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று குடும்பத்தோடு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY