திருச்சியில் 8600 பேருக்கு வேலை….. – கலெக்டர் அழைப்பு

2555
Spread the love

திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழிநெறி வழிகாட்டும் மையம், ஜமால் முகமது கல்லுாரியுடன் இணைந்து நடத்தும் தனியார் வெலை வாய்ப்பு முகம் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகில் உள்ள ஜமால் முகமது கல்லுாாியில் நடைபெற உள்ள இந்த வேலை வாய்ப்பு முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 8600 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க உள்ளனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8,10,12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பாரா மெடிக்கல், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், பி.எட்., பி.ஈ., வரை படித்தவர்கள் தங்கள் பயடேட்டாவுடன், கல்விச்சான்று, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். அனுமதி முற்றிலும் இலவசம். முன்பதிவு செய்ய விரும்புவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு கேட்டுக்கொண்டுள்ளார். 

LEAVE A REPLY