இனி கூட்டம் இல்லை – பெட்டிதான்….

306
Spread the love

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று வௌியிட்டுள்ள செய்தி குறிப்பில்…… திருச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. எனவே தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடியும் வரை திங்கள் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாது. அதே போல மாதாந்திரம் நடைபெறும் விவசாயிகள் கூட்டம், வௌ்ளி தோறும் நடைபெறும் அம்மா திட்ட முகாம்கள், சிறப்பு மனுநீதி நாள் முகாம் போன்ற கூட்டங்களும் நடைபெறாது. இருப்பினும் பொதுமக்கள் அத்தியாவசிய கோரிக்கைகளை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில்

இடலாம். அம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று அவர் அந்த செய்தி குறிப்பில் தொிவித்துள்ளார். இதனை தொடர்ந்து திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பெட்டி வைக்கப்பட்டதோடு, முதல்வர் படத்துடன் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்கள் மறைக்கப்பட்டன. 

LEAVE A REPLY