ஓட்டு போட கிளவுஸ் கட்டாயம்… திருச்சி கலெக்டர் தகவல்…

58
Spread the love

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் விதிமுறைகள் கடைபிடிப்பது தொடர்பாக காவல்துறை மற்றும் அனைத்து துறை தலைமை அலுவலர்களுடனான கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அனைத்து கட்சி கூட்டமும் நடைபெற்றது. குறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு செய்தியாளர்களிடம் கூறும்போது…. திருச்சி மாவட்டத்தில் தொகுதிக்கு 9 பறக்கும் படைகள் என 9 தொகுதிக்கு 81 குழுக்கள் செயல்பட்டு வருகிறது. பதட்டம் நிறைந்த வாக்கு சாவடிகளாக 96 தொிவு செய்யப்பட்டு உள்ளது. வாக்காளர்கள் வாக்கு பதிவு செய்வதற்கு முன்னால் கைகளை சுத்தம் செய்த பின்னர் தேர்தல் கமிஷனர் அளிக்கும் கிளவுஸ் அணிந்து கொள்ள வேண்டும். இந்த கிளவுஸ் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும். பணிபுரியும் தேர்தல் அலுவலர்களுக்கும் க்ளவுஸ் கொடுக்கப்படும். திருச்சி மாவட்டத்தில் 80 வயதுக்கும் மேற்பட்ட வயதுடைய  53,044  பேருக்கு 5 நாட்களுக்கு முன்னரே படிவம் அனுப்பி வைக்கப்படும். அவர்கள்

வீட்டிலேயே வாக்கு பதிவு செய்து கொண்டு செல்லப்பட்ட பெட்டிகளில் வாக்கு சீட்டை இடலாம். திமுக மாநாடு நடைபெற இருந்த திடலில் உள்ள கொடிகம்பங்களை இன்று மாலைக்குள் அகற்ற வேண்டும். இல்லையென்றால் தேர்தல் கமிஷன் அகற்றும். கொரோனா நோயாளிகள் மாலை 5 மணிக்கு மேல் வந்து வாக்களிக்கலாம். அவர்களுக்கு தபால் வாக்களிக்கவும் அனுமதி உண்டு. சுவர் விளம்பரம் அனுமதி கிடையாது. அவ்வாறு செய்திருந்தால் அதனை தேர்தல் கமிஷன் அழித்து விட்டு அதற்குண்டான செலவு தொகையை வேட்பாளர் செலவினங்களுடன் சேர்க்கப்படும். 5 பேருக்கு மேல் பிரச்சாரத்திற்கு சென்றால் வழக்கு பதியப்படும். வங்கி கணக்கு பரிவர்த்தனைகள் நேற்று முதல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் டிஆர்ஓ பழனிகுமார், திருச்சி மாநகர காவல்துறை கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி, திருச்சி மாவட்ட எஸ்பி ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

LEAVE A REPLY