பிரசாந்த் கிஷோர் மீது ஐடியில் புகார்… திமுகவிற்கு நெருக்கடி..?

496
Spread the love

இந்திய அளவில் அரசியல்செயல்பாடுகள் மற்றும் வியூகங்களுக்காக பல்வேறு கட்சிகளுடன் ஐபேக் நிறுவனம் இணைந்து செயல்பட்டு வருகிறது. சர்வேக்கள், வேட்பாளர் பட்டியல் என பல்வேறு  பணிகளையும் இந்த நிறுவனம் கட்சிகளுக்கு செய்து கொடுக்கிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் பணிகளுக்காக திமுகவுடன் ஐபேக் நிறுவனம் இணைந்து செயல்பட்டு  வருகிறது. இந்த நிலையில் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ராமாராவ் மற்றும் முருகேசன் ஆகியோர் டில்லி வருமானவரி புலனாய்வு பிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

அதில் பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து தன்னுடைய வருமானத்தை வரி ஏய்வு செய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சென்னை வருமானவரித்துறை அதிகாரிகள் பிரசாந் கிஷோர் மற்றும் ஐபேக் நிறுவனத்தின் வருமானங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளனர். சட்டமன்ற தேர்தல் பணிகளுக்காக ஐபேக் நிறுவனத்துடன் திமுக 300 கோடி ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பதாக கூறப்பட்டது. இதன் அடிப்படையில் முதல் தவணையாக 100 கோடி ரூபாயும், தொடர்ந்து மாதம் 20 கோடி ரூபாய் பணமும் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் வருமானவரித்துறையினரின் இந்த விசாரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

LEAVE A REPLY